நாடு முழுவதும் இன்று முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதச் செய்ற்பாடுகள்முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதை வெறுமனே ஓர் இனவாதச் செயற்பாடாகப்பார்க்க முடியாது. இதன் பின்னால் பெரும் அரசியல் நிகழ்ச்சி நிரலொன்றுஇருக்கின்றது.
இந்த இனவாதச் செயற்பாடுகளின் பின்னால் ஒழிந்துகொண்டு அரசு அதன்திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றப் போகின்றது.அரசின் எந்தெந்தத் திட்டங்களுக்கு மக்களின் எதிர்ப்பு உள்ளதோ அந்தத்திட்டங்கள் அனைத்தையும் இவ்வாறு நிறைவேற்றுவதே அரசின் ஒரே நோக்கமாகும்.
இனவாதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் என்ற பெயரில் முதலில் அவசரகாலச்சட்டம் கொண்டுவரப்படும். அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி உள்ளூராட்சி மற்றும்மாகாண சபைத் தேர்தல்கள் மேலும் ஒத்திப்போடப்படும்.சமஷ்டி தீர்வை வழங்கும் அரசமைப்பை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்றுஇந்த அரசு துடியாய்த் துடிக்கின்றது.
அதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருவதால் முஸ்லிம் சிங்களப் பிரச்சினையில் மறைந்து கொண்டு அவசரகாலச்சட்டத்தைப் பயன்படுத்தி இந்த அரசமைப்பை நிறைவேற்றுவதற்கு அரசுதிட்டமிட்டுள்ளது. இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தமும் இவ்வாறே நிறைவேற்றப்படும்.இந்த அடிப்படையில் சிங்கள முஸ்லிம் இனக்கலவரம் ஏற்பட்டால் அதில் நன்மையடையப்போவது எவரென்று எண்ணிப் பார்க்கவேண்டும்.
கறுப்பு ஜூலையை உருவாக்கியவர்கள்ஐக்கிய தேசியக் கட்சியினர்தான். அதனால் நன்மையடைந்தவர் பிரபாகரன்.அந்தக் கலவரத்தில் சொத்துகளை இழந்த தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுபுலிகளுக்குப் பணம் அனுப்பினர். அதன் பின்புதான் தற்கொலைப் புலிகளே உருவாகினர்.கறுப்புச் ஜூலை விடியோக்களை புகைப்படங்களை காட்டிக்காட்டியே தற்கொலைப்புலிகள் உருவாக்கப்பட்டனர்.
இப்போது இந்த அரசு வேறொரு ஜூலையை உருவாக்கப்போகின்றது. நல்லாட்சி என்ற பெயரில்நாட்டுக்குப் பேராபத்தை விளைவிக்கும் செயற்பாடுகளில் இந்த அரசுஈடுபட்டுக்கொண்டு வருகின்றது. இந்த உண்மையை உணர்ந்து மக்கள் விழிப்புடன்செயற்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.