வடக்கு மாகாண அமைச்சரவையை மாற்றுவதாக இருந்தால் முதலமைச்சர் உட்பட 5 அமைச்சர்களையும் மாற்றுவது குறித்துப் பங்காளிக் கட்சிகளும் தீவிரமாகப் பரிசீலிக்கப்படும் என்று தமிழ் அரசுக் கட்சி எச்சரித்துள்ளது.
‘நான்கு அமைச்சர்களையும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீக்க முற்பட்டால்இ ஒட்டுமொத்தமாக 5 பேரையும் நீக்கிவிட்டு புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டும் என்று எங்களிடம் பல தரப்பும் கோரிக்கை – அழுத்தங்களை முன்வைத்துள்ளன. நான்கு அமைச்சர்களையும் மாற்றும் முடிவை அவர் எடுத்தால்இ அந்தக் கோரிக்கைகள் கட்டாயம் பரிசீலிக்கப்படும்’என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும்இ நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா காட்டமாகத் தெரிவித்திருக்கின்றார்.
வடக்கு அமைச்சர்கள் விவகாரம் தொடர்பில் தமிழரசுக்கட்சி ஊடகம் ஒன்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா மேலும் கூறியதாவதுஇ
விசாரணைக் குழு அறிக்கை அடிப்படையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுக்கட்டும் என்றே நாம் ஒதுங்கியிருந்தோம். அந்த விசாரணைக் குழு அவரால் அமைக்கப்பட்டது. அது அவருக்கு பரிந்துரைகளை முன்வைத்தது. அதன் பிரகாரம் முடிவு எடுக்க வேண்டியவர் அவர்தான். அதனால்தான் நானோஇ கட்சித் தலைவர் இரா.சம்பந்தனோ இந்த விடயங்களில் தலையிடுவதில்லை என்று விலகியிருந்தோம்.
நாம் ஒதுங்கியிருப்பது தவறு எனப் பலரும் எம்மை விமர்சிக்கின்றனர். இதேவேளைஇ அமைச்சர்கள் நான்கு பேரையும் நீக்கிவிட்டு தனக்கு வேண்டியவர்களை நியமிக்க முதலமைச்சர் முயல்வதாகவும் எமக்குப் பலரும் முறைப்பாடுகள் தெரிவித்துள்ளனர். நான்கு அமைச்சர்களையும் முதலமைச்சர் மாற்றம் செய்வதானால் அவரும் பதவி விலக வேண்டும்.
புதிய அமைச்சரவையைக் கட்சி நியமனம் செய்ய வேண்டும் என்று பலரும் எமக்கு கோரிக்கை விடுக்கின்றனர். முதலமைச்சர் நாளை (இன்று) என்ன செய்யப் போகின்றார் என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அவர் 4 அமைச்சர்களையும் மாற்றினால்இ எமக்கு விடுத்த கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்இ அமைச்சர்கள் விவகாரத்தை சபைக்குள் முடித்திருக்க வேண்டும்.
அதற்கு விசாரணைக் குழு அமைத்து இன்று விடயம் பகிரங்கமாகியிருக்கின்றது. இதனால் மாகாண சபைக்கு மாத்திரமல்லஇ கட்சிக்கும் அவப் பெயர்தான். கட்சியைத் தலைகுனியச் செய்கின்ற செயற்பாட்டையே அவர் செய்திருக்கின்றார். விசாரணைக் குழு குற்றமிழைத்தவர்கள் என்று இருவரை அடையாளப்படுத்தி பரிந்துரைத்திருக்கின்றது. அந்தப் பரிந்துரையைச் செயற்படுத்துவதா? இல்லையா? என்பது முதலமைச்சரைப் பொறுத்த விடயம். ஆனால் குற்றமிழைத்தோரைப் பாதுகாப்பதற்காக நிரபராதிகளைத் தண்டிக்கக் கூடாது.
முதலமைச்சர் விக்னேஸ்வரன்இ அமைச்சர் பொ.ஐங்கரநேசனைப் பாதுகாக்கும் வகையில் செயற்பட்டவர். அமைச்சர் ப.சத்தியலிங்கத்தை சிக்க வைக்கும் நோக்குடனேயே விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இப்போது விசாரணைக் குழு மீது குற்றம் சுமத்தத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்இ விசாரணைக் குழு சரியாகத்தான் செயற்பட்டது என்று சொல்லியிருக்கின்றார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன்இ நான்கு அமைச்சர்களையும் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறினால்இ ஒட்டுமொத்த அமைச்சரவையையும் புதிதாக நியமிக்கஇ நாம் கட்சித் தலைமையுடனும்இ ஏனைய பங்காளிக் கட்சிகளுடனும் பேசுவோம் – என்றார் என்று அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.