வடமாகாணசபை யின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஜனநாயகத்துக்கு முரணான வகையிலும்இ ஒருதலைப் பட்சமாகச் செயற்படுகின்றார் எனக் குற்றம்சாட்டி எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மகாணசபையின்விசேட அமர்விலிருந்து வெளியேறிவிட்டார்.
வடமாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தன்னிலை விளக்கம் அளிக்கும் விசேட அமர்வு இன்று வடமாகாணசபை கட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இதன்போது விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தன்னிலை விளக்கத்தை அளித்தபின்னர் சபையானது 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
பின்னர் சபை கூடியபோது எதிர்க்கட்சித் தலைவரை பேசுவதற்கு அனுமதிப்பதா? இல்லையா? என சபையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றது.
இதன்போதுஇ வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதித்தால் ஏனைய உறுப்பினர்களும் பேசுவார்கள் எனத் தெரிவித்தார்.
இதனையடுத்துஇ அமைச்சர்கள் தன்னிலை விளக்கம் அளித்தால் நாங்கள் பேசுவோம். எதிர்க்கட்சியாகிய எங்களைப் பேச விடாவிட்டால் நாங்கள் சபையை விட்டு வெளியேறுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்தார்.
இதன்போது அவைத்தலைவர் இந்த விடயத்தை இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசலாம் எனத் தெரிவித்ததையடுத்துஇ எதிர்க்கட்சித் தலைவர் இது ஜனநாயகத்துக்கு முரணான செயல் எனவும் நீங்கள் பாரபட்சமாகச் செயற்படுகிறீர்கள் எனவும் குற்றம் சுமத்தினார்.
இதனயைடுத்து எதிர்க்கசித் தலைவருக்கும்இ அவைத்தலைவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு எதிர்க்கட்சித் தலைவர் சபையைவிட்டு வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.