இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தெரிவாகியுள்ள நிலையில், இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்தியா- வங்கதேச அணிகள் மோதுகின்றன.
இதுகுறித்து வங்கதேச அணியின் முன்னாள் அணித்தலைவரான அஷ்ரபுல் கூறுகையில், அரையிறதி போட்டியில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது என கூறப்பட்டாலும், வங்கதேசம் அதிர்ச்சி கொடுக்கலாம்.
இலங்கையால் இந்தியாவை வெல்ல முடியும் போது வங்கதேசத்தாலும் முடியும்.
இந்தியாவும், வங்கதேசமும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள், இந்த போட்டி கடும் சவால் நிறைந்ததாகவே இருக்கும்.
10 ஓவருக்குள் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டால் எங்கள் அணிக்கு முன்னேற்றத்தை கொடுக்கும்.
ருபெல் மற்றும் தஸ்கினால் தொடக்க ஆட்டக்காரர்களை திணறடிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.