வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்றைய நாளில் (07-04-2009) செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளான மாத்தளன் ,அம்பலவன்பொக்கணை , இடைக்காடு, முள்ளிவாய்க்கால், மற்றும் வலைஞர்மடம் ,ஆகிய பகுதிகளில் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, ஆர்பிஜி உந்துகணை தொலைதூர துப்பாக்கிச் சூட்டு மற்றும் வான் தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள் தாக்குதல்களில் 3 குழந்தைகளும் 11 சிறுவர்களும் உட்பட 31 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும் மாத்தளன் அம்பலவன்பொக்கணை மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகளில் சிறிலங்கா படையினரின் தொலைதூர துப்பாக்கிச் சூட்டில் நாள்தோறும் பலர் படுகொலை செய்யப்படடார்கள் உணவுப் பொருட்களுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களே சிறிலங்கா படையினரின் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருந்தார்கள்.
அம்பலவன்பொக்கணை பகுதியில் 06.04.2017 அன்று வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த 52 வயதுடைய இரத்தினம் சண்முகலிங்கம் என்பவர் சிறிலங்கா படையினரின் தொலைதூர துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளையில் அம்பலவன்பொக்கணை தொடக்க சுகாதார நிலையத்தில் இயங்கும் செம்மலை மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்திருந்த 22 வயதுடைய யோகேஸ்வரன் பரிமளா மற்றும் 18 வயதுடைய அ.ராகுலன் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது இவ்வாறிருக்க சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக சிறுவர்களும் முதியவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உளவளத்துணையில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்திருந்தார்கள்
இதற்கிடையே சிறிலங்கா படையினர் அடிக்கடி கப்பல் மீது தாக்குதல் நடத்துவதனனால் உணவுப்பொருட்களை இறக்குவதிலும் நோயாளர்களை கப்பலில் ஏற்றுவதிலும் பெரும் இடர்கள் காணப்பட நாட்கள் .
இன்றைய நாளில் படுகொலை செய்யப்பட்டவர்களில் கிடைக்கப்பெற்ற விபரம்
இராசமாணிக்கம் ஜோதிகா (8 மாத குழந்தை)
சிவசக்தி தேவதாசன் (வயது 02)
பாஸ்கரன் லோகேஸ்வரன் (வயது 2 வருடம் 6 மாதம்)
சேதுகாவலன் மயூரதன் (வயது 05)
தர்மேந்திரன் (வயது 06)
தர்மேந்திரன் கார்த்திகா (வயது 06)
கந்தசாமி தனுசன் (வயது 08)
லோகநாதன் லோஜிதா (வயது 09)
டினோசிலா (வயது 09)
லோகநாதன் திசா (வயது 09)
முருகானந்தம் தர்மினி (வயது 12)
பாக்கியராஜா மதுசனா (வயது 13)
முத்துலிங்கம் கம்சனா (வயது 14)
தர்மராஜ் கிருத்திகா (வயது 14)
சோதி (வயது 48)
சிவராசா (வயது 35)
பஞ்சலிங்கம் தனஞ்சிநாத் (வயது 28)
ம.சந்திரன் (வயது 69)
சிவகுருநாதன் புனிதலட்சுமி (வயது 57)
இ.சுபாசினி (வயது 30)
தில்லைநாதன் சுமதி (வயது 38)
லோகநாதன் ஹேமா (வயது 32)
சிவசுப்பிரமணியம் பாஸ்கரன் (வயது 34)
செ.சுடரேந்தி (வயது 33)
தர்மலிங்கம் வீரசிங்கம் (வயது 54)
இந்திரராஜா (வயது 42)
கேசவன் புனிதமலர் (வயது 32)
செல்வரட்னம் செல்வமணி (வயது 38)
கந்தையா கருணாகரன் (வயது 29)
சிவபாதராஜா பார்வதி (வயது 42)
இவ்வாறு இதே நாளில் இன்னும் பலர் வேறு வேறு இடங்களில் படுகொலை செய்யப்பட்டார்கள்
-மீள் பதிவு