பிரித்தானிய உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பு ஒன்றில் Deport First & Appeal later எனும் உள்விவகார அமைச்சின் கொள்கை Article 8 of the European Convention on Human Rights (“ECHR”)க்கு முரணானது என்று தீர்ப்பளித்துள்ளது.
இந்தக் கொள்கை விண்ணப்பதாரர்களுக்கு முழுமையான மற்றும் சரியான மேன்முறையீட்டு உரிமையை வழங்கவில்லை என்றும் தீர்ப்பளித்துள்ளது.
R (on the application of Kiarie) (Appellant) v Secretary of State for the Home Department (Respondent) எனும் வழக்கில் நேற்று(14/06/2017)வழங்கப்பட்ட தீர்ப்பிலேயே உச்சநீதிமன்றம் இவ்வாறான தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு விண்ணப்பதாரர்களும் கென்யா மற்றும் ஜமேக்கா நாடுகளிலிருந்து வந்து குடியேறியிருந்தார்கள்.
வெவ்வேறு தனிப்பட்ட ரீதியான குற்றச்செயல்கள் காரணமாக உள்விவகார அமைச்சு அவர்களை தங்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பும்படி கட்டளையிட்டிருந்தது.
Article 8 of the European Convention on Human Rights (“ECHR”) கீழ் அவர்களுடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை மீறுவதாகும் எனும் விண்ணப்பத்தையும் உள்விவகார அமைச்சு நிராகரித்திருந்தது.
அவர்களுடைய நாடு கடத்தல் உத்தரவை மேற்கொள்ளும் பொழுது Nationality, Immigration and Asylum Act 2002 பிரிவு 94B கீழ் உள்விவகார அமைச்சு அவர்களுடைய உள்நாட்டு மேன்முறையீட்டு உரிமையை மறுத்திருந்தது.
மேற்குறிப்பிட்ட இந்தக் கொள்கை யூலை2014ல் Nationality, Immigration and Asylum Act 2002 பிரிவு94B சேர்க்கப்பட்ட பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது.
அத்துடன், இதன் பிரகாரம் இந்தக் கொள்கை, உள்விவாகார அமைச்சு செயலாளருக்கு, நாடு கடத்தப்படுவதற்கு எதிர்நோக்கியுள்ள தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுடைய மனித உரிமை மனுக்களை முற்றாக மறுப்பதற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது.
அதனுடைய விளைவு, அவர்கள் நாட்டுக்கு வெளியே திருப்பி அனுப்பப்பட்ட பின்புதான் தங்களுடைய மேன் முறையீடுகளைச் செய்யலாம்.
இவ்வாறு இருக்கையில் உச்ச நீதிமன்றத்திற்கு வந்த இந்தவழக்கில், உச்ச நீதிமன்றம் ஏகமனதாக விண்ணப்பதாரர்களுடைய மேன்முறையீட்டை ஏற்றுக்கொண்டதுடன், உள்விவகார அமைச்சினுடைய முடிவையும் தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இந்தக் கொள்கை சாதாரணமான முறையில் சரியான ஒரு மேன்முறையீட்டு உரிமையை வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் உச்சநீதிமன்றம், பல கருசனைகளையும் முன்வைத்துள்ளது. குறிப்பாக வெளிநாட்டிலிருந்து மேன்முறையீடு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு முறையான சட்ட ஆலோசனை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
அவர்கள் சட்ட ஆலோசனைகைளை பெற்றாலும் விண்ணப்பதாரிக்கும், சட்டவாளர்களுக்கும் கடுமையான கஷ்டங்கள் ஏற்படலாம்.
அதாவது வழக்கிற்கு முன்னரும் வழக்கின் பொழுதும், ஆலோசனைகளை வழங்குவதிலும், பெறுவதிலும் கடுமையான கஷ்டங்கள் ஏற்படலாம்.
மேலும் மேன்முறையீட்டு வழக்கிற்கு முன்னர் திருப்பி அனுப்பப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு முக்கியமாக ஆதாரங்களை திரட்டுவதற்கு கஷ்டங்கள் ஏற்படும்.
மற்றும் Probation officer மற்றும் சமூகசேவர்கள் (Social workers) அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களையும் அவர்களையும் சந்தித்து அறிக்கை தயாரிப்பது போன்ற விடயங்கள் கஷ்டமாக இருக்கும்.
அத்துடன், நாட்டுக்கு வெளியிலிருந்து வீடியோ மூலம் சாட்சி கொடுப்பது, நேரில் வழக்கில் சாட்சியம் கொடுப்பது போன்று திருப்திகரமாக இருக்காது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலதிக விபரங்களையும், நீதிமன்றத்தின் தீர்ப்பையும் வீடியோ மூலமும் நீங்கள் பின்வரும் இணைப்பில் பார்க்கலாம்.
தகவல் Jay Visva Solicitors
மேலதிக தொடர்பு எண் ( 44) 020 8573 6673