எங்களிற்கும் நம்பிக்கைக்கும்
எட்டாப் பொருத்தம்.
நாங்கள் நம்பிக்கையை
நம்பினாலும்இ நம்பிக்கை
நம்மை நம்புவதில்லை
என்றுமே எங்களிற்கு
தேர்தல்களில் நம்பிக்கையில்லை
வெள்ளைக்காரன் காலம்தொட்டு
நாங்கள் தேர்தல்களில்
நம்பிக்கை வைப்பதில்லை
தேர்தல்களில் வென்றுவரும்
கற்றவர்களும் கனவான்களும்
வென்றபின் அமைச்சர்களாகி
எங்களை மடையர்களாக்கியதால்
நாங்கள் யாரையும் நம்புவதுமில்லை
வட்டுக்கோட்டைக்கு வோட்டு
போட்டு கடைசியில்
மாவட்ட சபைக்கும்
வோட்டு போட்டு
கரைந்தது நம்பிக்கை மட்டுமே
படிப்பை உதறிவிட்டு
பெடியள் துவக்கெடுக்க
எங்கிருந்தோ வந்த
நம்பிக்கையும் அவங்களின்
சண்டையில் அழத்தொடங்கியது
எம்ஜிஆரும் இந்திராவும்
எங்களை காப்பாற்றுவினம்
என்றிருந்த நம்பிக்கையையும்
இந்தியன் ஆமிக்காரன்
போட்டுத் தள்ளினான்.
யாழ்ப்பாணத்தைப் பிடித்து
சந்திரிக்காவும் ரத்வத்தையும்
தகர்த்த நம்பிக்கைக்கு
ஓயாத அலைகள் தான்
புத்துயிர் தந்தது
சொல்ஹேய்மை நம்பி
நாடுநாடாய் பறந்து
பேசியும் பலனில்லாமல் போகஇ
பேச்சுவார்த்தையிலும் இல்லாமல்
போனது நம்பிக்கை
முள்ளிவாய்க்கால் மண்ணில்
தகர்ந்து போனது
தனிநாட்டுக் கனவோடு
தன்மானமும் வீரமும் மட்டுமல்ல
தன்னம்பிக்கையும் தான்
மகிந்தவின் கொடுங்கோலாட்சியில்
மகிழ்ச்சி தந்த
ஜெனிவாவும்இ நல்லாட்சியின்
ஜனனத்துடன் நம்பிக்கைக்கு
விடை கொடுத்தது
நம்பிக் கெட்ட
நாட்களை மறவாமல்
நல்லாட்சிக்கு ஆதரவளிக்க
நல்லாட்சியோ நம்பிக்கைக்கே
நலமடித்து நக்கலடித்தது
அல்லல்படும் சனத்திற்கு
அருமருந்தாய் ஏதாச்சும்
செய்வார்களென நம்பி
செயல்வீரர்களை மாகாணசபைக்கு
அனுப்பியதும் நம்பிக்கையீனம்
ஊரெல்லாம் அழுதிருக்கஈ
உலகம் சுற்றிய
நாயகர்கள்இ மக்களின்
நம்பிக்கையை மதித்து
நடக்கவுமில்லை மதிக்கவுமில்லை
தீர்மானங்கள் நிறைவேற்றுவதில்
தீர்க்கமாய் இருந்த
சபையில் வருகிறதாம்
நம்பிக்கையில்லா தீர்மானம்இ
நம்புங்கடா சத்தியமாய்
நம்பிக்கையை தொலைத்து
நம்பிக்கையை இழந்து
நம்பிநம்பி ஏமாந்து
நாதியற்று நாங்களிருக்க
நம்பிக்கையில்லா தீர்மானமாம்
நம்பிக்கையில்லை தான்
எங்களிற்கு உங்களில்
எங்களிற்கு உலகத்தில்
எங்களிற்கு கடவுளில்இ ஏன்
எங்களிற்கு எங்களிலும்
– ஜூட் பிரகாஸ்.