வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீளப்பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையினை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள வடமாகாண அமைச்சர்களை பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்றைய தினம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்துஇ ஆளும் கட்சி உறுப்பினர்கள் சீ.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வர தீர்மானித்துஇ அது குறித்த
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்இ குற்றம் சாட்டப்படாத அமைச்சர்களை பதவியில் தொடர்ந்தும் நீடிக்க செய்வதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புதான் என்னுடைய பலம் எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து இன்று இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலமைச்சரின் வீட்டிற்குச் சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்இ
எனக்கு என்று அரசியல் ரீதியாக பலத்தை சேர்த்து வைக்கவில்லைஇ பொது மக்களுக்கு செய்யும் சேவைதான் எனக்கு இருக்கும் பலம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும்இ உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள். நடப்பதை இருந்து பார்ப்போம் எனவும் முதலமைச்சர் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.