கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரதான வீதிக்கு முன்பாக 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று 9 ஆவது நாளாகவும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இங்கு தொடர்ந்தும் மாணவர்கள் தெரிவிக்கையில்,
கடந்த கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் பிரச்சினை தொடர்பாக அக்கறையுடன் செயற்பட்டார்கள். ஆனால் மாணவர்களுக்கு பாரிய அநீதியை தற்போதுள்ள உபவேந்தர் உட்பட நிர்வாகிகள் முன்னெடுக்கின்றனர்.
அதன் காரணமாக 05 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பாரிய போராட்டத்தில் இரவு பகலாக வீதியில் இருக்கின்றோம்.
பொய்யான முடிவு வேண்டாம், விடுதிப் பிரச்சினைக்கு ஒழுங்கான முடிவை தரவேண்டும், நியாயமற்ற வகுப்புத் தடையை உடன் நிறுத்த வேண்டும், சீசீரிவி கெமராக்களை உடனடியாக அகற்றவும், பட்டப்படிப்பினை சரியான நேரத்தில் நிறைவு செய்து தரவேண்டும், மாஹாபொல மற்றும் மாணவர் உதவிதொகையினை சரியான காலத்தில் வழங்காமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் கிழக்கு பல்கலைக்கழகத்திற்குள் நடைபெறுகின்ற மாணவர்களின் போராட்டங்கள் மற்றும் ஏனைய பொது நிகழ்வுகளுக்கு கூட ஊடகவியலாளர்களுக்குரிய அனுமதி தற்போதுள்ள உபவேந்தர் நிர்வாகத்தில் மறுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அனைத்து மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இன்றைய ஊடக சந்திப்புகூட மட்டக்களப்பு திருமலை பிரதான வீதியோரத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.