கவுதமலாவில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், ஐந்து பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கவுதமாலாவின் தலைநகரான தாஜுமுல்கோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.9-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தாஜுமுல்கோ நகரின் தென்மேற்கே சுமார் 8 கிலோமீற்றர் தொலைவுக்கு ஏற்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. கட்டிட இடிபாடுகளுக்குள் மக்கள் பலர் சிக்கியுள்ளனர். இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியதில் ஐந்து பேர் பலியாகியுள்ளதுடன். 7-பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அங்கு மீட்பு பணியினர் விரைந்துள்ளனர்.
இது குறித்து அதிபர் ஜிம்மி மோரேல்ஸ் கூறுகையில், பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளோம். மீட்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முதலில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் கவுதமாலா நகரிலிருந்து 156 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சான் மைக்ரோஸ் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கவுதமாலாவில் சுமார் 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.