வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வட மாகாண சபை உறுப்பினர்கள் செயற்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் செயற்பாடுகளைக் கண்டித்து நடத்தப்படும் கடையடைப்புக்கு தாங்களும் பூரண ஆதரவு வழங்குவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,
கௌரவ வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களுக்கு எதிராக தமிழரசுக்கட்சி வடமாகாண எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்ததைக் கண்டித்தும் நீதியை நிலைநாட்ட முயற்சிக்கும் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழ் மக்கள் பேரவையால் நாளையதினம் (16.06.2017) வெள்ளிக்கிழமை அழைப்பு விடுக்கப்பட்ட வடமாகாணம் தழுவிய முழு அடைப்பிற்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினராகிய நாமும் எமது முழு ஆதரவினையும் வழங்குகின்றோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.