எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க வீரர் ஷிகர் தவான் (46) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
அதன் பின் ஜோடி சேர்ந்த ரோகித், கோஹ்லி வங்கதேச பந்து வீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தனர். சீரான இடைவெளியில் பவுண்டரிகள் அடித்த ரோகித் சர்மா, ஒருநாள் அரங்கில் 11வது சதத்தை பூர்த்தி செய்தார்.
மறுமுனையில் கோஹ்லியும் மின்னல் வேகத்தில் ஓட்டங்கள் சேர்க்க, இந்திய அணி 40.1 ஓவரில், 1 விக்கெட்டுக்கு, 265 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் (123), கோஹ்லி (96) அவுட்டாகாமல் இருந்தனர்.
லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் 18ல் நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொள்கிறது. சாம்பியன்ஸ் கிண்ணம் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதிபெறுவது இது நான்காவது முறையாகும்.
இந்திய அணி இதுவரை 2 முறை (2002, 2013) சாம்பியன் பட்டமும், 1 முறை (2000) இரண்டாவது இடமும் பெற்றது குறிப்பிடத்தக்கது.