வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் வவுனியா மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடல் ஒன்றினை இன்றைய தினம் மேற்கொண்டிருந்தனர்.
இதன் போதே நாளைய தினம் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளுவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து மக்களையும் இதில் கலந்து கொள்ளுமாறு வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.