படுகொலை செய்யப்பட்டார்களை அந்த அந்த இடங்களில் புதைத்து விட்டும் சிலர் கைவிட்டு விட்டும் பாதுகாப்பு இடங்களை நோக்கி சிதறி ஓடிய நினைவுநாள்.
இன்றைய நாளில் 09-04-2009 அன்று வியாழக்கிழமை காலை 5:00 மணி தொடக்கம் மாலை 6:00 மணிவரை கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் எறிகணைத் தாக்குதல்களை மக்களை இலக்கு வைத்து முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு அம்பலவன்பொக்கணை, இடைக்காடு மற்றும் மாத்தளன் மக்கள் காப்பு வலயம் மீது பகுதிகளை நோக்கியே சிறிலங்கா படையினர் கொலைவெறித் தாக்குதல்களில் 322 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
அம்பலவன்பொக்கணை மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகளில் மட்டும் 212 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களின் உடலங்களை அந்த அந்த இடங்களில் புதைத்து விட்டும் சிலர் கைவிட்டு விட்டும் பாதுகாப்பு இடங்களை நோக்கி சிதறி ஓடி நினைவுநாள் இன்று இதேவேளையில் ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகள் மீது தாக்குதல் மீண்டும் மீண்டும் இப்பதிகளை நோக்கி தாக்குதலை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இதே நாளில் இன்னும் பலர் வேறு வேறு இடங்களில் படுகொலை செய்யப்பட்டார்கள்
-மீள் பதிவு