வடக்கு மாகணத்தின் சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சர்களுக்கு எதிரான கட்டாய விடுமுறைய இரத்துச் செய்து அவர்கள் அமைச்சர்களாக நீடிக்க வழிசெய்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெறுவதாக எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் இன்று நண்பகல் முதலமைச்சரைத் தொடர்புகொண்டு வலிறுயுத்தியுள்ளார்.
எனினும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் விடுமுறையை விட்டுக் கொடுக்க தயார் ஆனால் சில உத்தரவுகளை நடைமுறைப் படுத்த அவர்கள் இணங்கவேண்டும் என கண்டிப்பான உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் முதலமைச்சர் அலுவலகம் முன் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முன் உரையாற்றிய முதலமைச்சர் உதாரணத்திற்கு ஒரு வைத்தியசாலைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதிலே ஊழல் செய்தால் அது மக்களையே பாதிக்கும் மக்களுக்கு சேவை செய்வதற்காக எனக் கூறி வாங்கிய உபகரணங்களில் ஊழல் என்றால் பாதிப்பு மக்களுக்குத்தானே எங்களுக்கு வருமானம் கிடைக்கிறது, பணம் கிடைக்கிறது. வசதிகள் கிடைக்கிறது என்ற காரணத்தால் நாங்கள் செய்வது தார்ப்பரியம் விளங்காமல் போய்விடுகின்றது. இவ்வாறான ஊழல்களிற்கு எதிரான நான் நடவடிக்கை எடுக்கும்போது முட்டுக்கட்டை போடுகிறார்கள். என பூடகமாக உரையாற்றினார்.
எனினும் தனது அலுவலகத்துள் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர் விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்பட்ட அமைச்சர்கள் மீது பாரிய மோசடிக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாகக் கிடைத்துள்ள. தான் யாரிற்கும் அடிபணிந்துபோய் விசாரணைகளைக் கைவிடப்போவதில்லை என்றார்.
மருத்துவ ஊழல் குறித்து முதலமைச்சர் குறிப்பிட்டவை அண்மையில் எழுத்து மூல உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களுடன் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்ட பல கோடி பெறுமதியான மருத்துவ உபகரணக் கொள்வனவு ஊழல் குறித்தே என தகவலறிந்த வட்டாங்கள் தெரிவித்துள்ளன. இதில் பல தலைகள் சிக்கிவிடும் என்பதாலேயே குறித்த சுகாதார அமைச்சரைக் காப்பாற்ற தமிழரசுக் கட்சி கங்கணங்கட்டிநிற்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.