முதலமைச்சரை நீக்குவதற்காக நீண்டகாலமாக வடமாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன் மற்றும் அயுப் அஸ்மின் ஆகியோர் திட்டமிடல் செய்தமை தற்போது ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது.
வடமாகாண சபையின் உறுப்பினரான விந்தன் கனகரத்தினம் விசாரணைக்குழுவுக்கு செய்த முறைப்பாட்டில் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டபோதும் விசாரணைக்குழு அதனை உள்ளடக்கியிருக்கவில்லை.
கடந்த 09 – 02 – 2016 அன்று விந்தனை சந்தித்த அஸ்மின் முதல்வர் விக்கினேஸ்வரனை விலக்கவேண்டும் என்றும் அதற்கு அவரது வலக்கையை உடைக்கவேண்டும் என ஆசனத்தின் கைப்பிடியை காட்டியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக வடமாகாண சபையின் இன்னொரு உறுப்பினரான ஜிரி லிங்கநாதனை அழைத்து உங்களுக்கு விவசாய அமைச்சராக கொண்டுவரவேண்டும் என சுமந்திரன் சேர் விரும்புகின்றார். அவர் உங்களில் நம்பிக்கை வைத்துள்ளார். எனவே இப்போது ஐங்கரநேசனுக்கு எதிராக தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் எனக்கேட்டார்கள்.
இப்படித்தான் தீடிரென எந்தவித அறிவிப்பும் இன்றி தீர்மானம் கொண்டுவந்து விசாரணைக்குழுவை அமைக்கவேண்டும் என அவைத்தலைவர் சிவஞானத்துடன் சேர்ந்து திட்டமிட்டார்கள் எனவும் அதில் தெரியவருகின்றது.
இணைப்புகள் கீழே