ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி உனாமெக்குலே சந்தித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு வலியுறுத்தி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு பகல், வெயில் மழை பாராது மூன்று மாதங்களுக்கு மேலாக தொலைத்த தமது உறவுகளுக்காக மக்கள் இவ்வாறு வீதியில் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.