கண்டி அஸ்கிரிய ஸ்ரீ சந்திரானந்த பௌத்த கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நவீன தொழில்நுட்பத்துடன் சமூகம் பற்றிக்கொண்டுள்ள இணையத்தளங்கள் மற்றும் முகநூல் என்பன தற்போது பிள்ளைகளின் திறமைகளையும் நற்பண்புகளையும் அழித்து வருகின்றன.
இதனால், கல்வியுடன் பிள்ளைகளின் அறிவை மாத்திரமல்லாது ஒழுக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டும்.
இணையத்தளங்ளும், சில ஊடகங்களும் இனவாத்தை தூண்டி இனங்களுக்கு இடையில், ஐக்கியத்தை சீர்குலைத்து நாட்டில் பதற்ற நிலைமையை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
எந்த நபரோ அல்லது அமைப்போ, மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தடையேற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால், அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் இனத்தை சார்ந்தவராக இருந்தாலும் அது கல்வி தொடர்பான பிரச்சினை.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அண்மையில் நடந்த விவாதம் ஒன்றில் பேசி ஒருவர் கடந்த சில மாதங்களில் 166 கத்தோலிக்க திருச்சபைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
நான் இது குறித்து பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் விசாரித்தேன். அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என பேராயர் கூறினார்.
சமூகத்தை தவறாக வழிநடத்தும் வகையில் சில நபர்கள் வெளியிடும் இவ்வாறான கருத்துக்களை கடுமையான நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.