மேற்கு லண்டன் கிரென்பெல் டவர் தீ விபத்தினால் இடம்பெயர்ந்த மக்களை மூன்று வாரங்களுக்குள் மீள்குடியேற்றுவதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே உறுதியளித்துள்ளார்.
மேலும், நிவாரண உதவிகளுக்காக 5 மில்லியன் பவுண்ட்ஸ்களை ஒதுக்குவதாகவும் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணியை கண்டறிவதற்கு பொது விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பாரியளவில் சேதங்களை ஏற்படுத்தியுள்ள இந்த தீ விபத்தில் குறைந்தது 30 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. எனினும் 17 பேர் உயிரிழந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தின்போது பலர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் தொடர்பிலும் இதுவரை எவ்வித முடிவுகளும் கிடைக்கவில்லை. 24 மாடி கட்டடம் முற்றாக சேதமடைந்துள்ளது. இதனால் உயிர்பிழைத்தவர்களும் தமது வீடு, சொத்து என அனைத்தையும் இழந்துள்ளனர்.