சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் நாளை எதிர்கொள்கிறது.
கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக பார்க்கப்படும் இரு நாடுகள் மோதும் போட்டி என்பதால் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு ஒரு புதிய வரலாற்று சாதனையாக இருக்கும்.
ஏனெனில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த 2007ம் ஆண்டில் நடந்த டி20 உலக கிண்ண இறுதிப் போட்டியில் டோனி தலைமையில் இந்தியா வெற்றி பெற்றது.
அதுதான் டோனிக்கு அணித்தலைவராக முதல் ஐசிசி இறுதிப்போட்டியாகும்.
அதேபோல அணித்தலைவராக பொறுப்பேற்ற பின்னர், விராட் கோஹ்லி சந்திக்கும் முதல் ஐசிசி இறுதிப்போட்டி நாளைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தான்.
எனவே டோனியைப் போல கோஹ்லியும் சாதனை படைப்பாரா என்ற பெரும் எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.