இளைய தளபதி விஜய் இன்று ரஜினிக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக வலம் வருபவர். இவர் நடித்தாலே அந்த படம் மினிமம் கேரண்டி தான், ரஜினிக்கு பிறகு 4 முறை ரூ 100 கோடி வசூலை கண்டதும் இவர் தான், இந்நிலையில் விஜய் இந்த நிலைக்கு வர எந்தெந்த படங்கள் காரணம் என்பதை பார்ப்போம்.
பூவே உனக்காக
விஜய்க்கு எத்தனை ஹிட் படங்கள் இன்று வந்தாலும், முதன் முதலாக ஹிட் என்ற வார்த்தைக்கு பிள்ளையார் சுழி போட்டதே விக்ரமனின் பூவே உனக்காக படம் தான்.
காதலுக்கு மரியாதை
விஜய்க்கு பேமிலி ஆடியன்ஸ் வந்தது காதலுக்கு மரியாதை படத்தில் தான், இவை விஜய்யின் அடுத்தடுத்த பல படங்களின் கால்ஷிட் கிடைக்க இப்படம் பெரும் உதவியாக இருந்தது, ஷாலினியும் முதன் முதலாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தது இந்த படத்தில் தான்.
துள்ளாத மனமும் துள்ளும்
விஜய் கொஞ்சம் தன் திரைப்பயணத்தில் சறுக்கலில் இருந்த தருணம், ஆனால், அறிமுக இயக்குனர் எழில் மீது வைத்து துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் நடித்தார், இப்படம் மெகா ஹிட் அடித்தது.
குஷி
துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்கு பிறகு விஜய் நடித்த அனைத்து படங்களும் தோல்வி தான், இவர் திரைப்பயணமே கேள்விக்குறியில் இருக்க, இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய குஷி விஜய்யின் செகெண்ட் இன்னிங்ஸை தொடங்கி வைத்தது, அதை தொடர்ந்து இவர் நடித்த ப்ரியமாணவளே, ப்ரண்ட்ஸ், பத்ரி என தொடர் ஹிட் தான்.
திருமலை
விஜய் பகவதி, நெஞ்சினிலே என ஆக்ஷன் படங்கள் நடித்து தோல்வியை சந்தித்தார், ஆனால், விடா முயற்சியால் திருமலை படத்தின் மூலம் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கி கலக்கினார்.
கில்லி
திருமலைக்கு பிறகு விஜய் மாஸ் ஆடியன்ஸையும் கவர்ந்தார், அவர்களையும், பேமிலி ஆடியன்ஸையும் மனதில் வைத்து இவர் நடித்த கில்லி அதிரி புதிரி ஹிட் அடித்தது, தமிழ் சினிமா இதுவரை கண்டிராத வசூலை படைத்தது. கில்லிக்கு பிறகு மதுர, திருப்பாச்சி, சிவகாசி என விஜய் உச்சத்திலேயே இருந்தார்.
போக்கிரி
விஜய் காக்கிசட்டை அணிந்து கலக்கிய படம் தான் போக்கிரி, இப்படம் ஒரு தெலுங்கு ரீமேக் என்றாலும் விஜய்யின் நடிப்பு மகேஷ் பாபுவை விட சிறப்பாக இருந்தது, இப்படத்தின் மூலம் பிரபுதேவா தமிழ் சினிமாவில் இயக்குனராக களம் கண்டார்.
துப்பாக்கி
விஜய்யின் திரைப்பயணத்தில் 2007 முதல் 2011 வரை மிகவும் மோசமான காலங்கள் என்றே கூறலாம், தொடர் தோல்வி, முன்னணி பத்திரிக்கைகளில் கிண்டல், கேலி என விஜய்யின் திரைப்பயணம் அதள பாதாளத்திற்கு சென்றது, ஆனால், தன் ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவால் முருகதாஸுடன் இணைந்து துப்பாக்கி என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தார், துப்பாக்கி விஜய்யின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்.
கத்தி
விஜய் மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த கத்தி, விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசியது, இப்படம் விஜய்யின் எதிர்கால அரசியல் பார்வைக்கு ஒரு விதை என்றே கூறலாம்.
தெறி
புலி என்ற படுதோல்வி படத்தை கொடுத்த பிறகு ஒரே ஒரு படம் இயக்கிய அட்லீயை நம்பி தெறி படத்தில் நடிக்க சம்மதித்தார், படமும் துப்பாக்கியில் இருந்து பறந்த தோட்டா போல் மின்னல் வேகத்தில் இருக்க, தெறி ஹிட் அடித்தது.
விஜய்யின் இந்த வெற்றி பயணம் விஜய்-61-லும் தொடர வாழ்த்துக்கள். மேலும், இதில் இடம்பெற்ற அல்லது இடம்பெறாத உங்கள் பேவரட் விஜய் படங்களை கமெண்ட் பாக்ஸில் கூறுங்கள்.