மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட பணத்தை பறிமுதல் செய்வதற்காக சுவிட்சர்லாந்து வங்கியுடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தவுள்ளது.
இதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய விசாரணை மேற்கொள்ளல், வழக்கு தாக்கல் செய்தல், குற்றத்தை தடுத்தல் மற்றும் மோசடியான முறையில் சேமித்த பணத்தை பறிமுதல் செய்தல் ஆகியன தொடர்பில் இருநாட்டு சட்டங்களுக்கு உட்பட்ட வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதுதொடர்பில் இரு நாட்டிற்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி கொள்ள அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பல்வேறு நபர்களினால் மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்ட பாரியளவு பணத்தை சுவிட்சர்லாந்து உட்பட பல்வேறு நாடுகளின் பிரதான தரப்பு வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக கடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அவ்வாறு மோசடியான முறையில் பணம் சேகரித்து வைப்பு செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலான ஆவணங்களும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.