ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லேரியாவில் உள்ள அங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு (காய்ச்சல் நோய் வைத்தியசாலை) இன்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
வைத்தியசாலையில் காணப்படும் குறைப்பாடுகளை ஆராய்ந்த ஜனாதிபதி குறைப்பாடுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயாளர்கள் அதிகரித்தன் காரணமாக நோயாளிகளை வைத்தியசாலையில் அனுமதிப்பது தற்காலிமாக நிறுத்தப்பட்டாலும் அவர்களுக்கு தேவையான சகல வசதிகளுடன் தலங்கம, வேதர, பிலியந்தலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
வேறு வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நோயாளர்களுக்கு தேவையான சகல விசேட மருத்துவ வசதிகளை தொடர்ந்தும் வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன் பின்னர் டெங்கு நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெறும் விடுதிக்கு சென்ற ஜனாதிபதி அவர்களிடம் தகவல்களை விசாரித்தார்.
ஜனாதிபதியுடன் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, வைத்தியசாலையின் பணிப்பாளர் திமுது ரத்நாயக்க உட்பட அதிகாரிகளும் வைத்தியசாலைக்கு சென்றிருந்தனர்.