ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார் நளினி. வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி, தன்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரிக்கக் கோரி சிறையில் நளினி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
சென்னை புழல் சிறைக்கு மாற்றினால், மகளின் திருமண ஏற்பாட்டினை கவனிக்க வசதியாக இருக்கும் என அவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரிக்கக் கோரி சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய நளினியிடம் சிறை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையை அடுத்து நளினி தனது உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றார். இதனையடுத்து நளினியின் 5 நாள் உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு வந்தது.