மேற்கு லண்டனில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த மேலும் பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
24 மாடிகளை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த 14ஆம் திகதி பாரிய தீ விபத்து ஏற்பட்டது. வேகமாக பற்றி எரிந்த தீ கட்டிடம் முழுக்க பரவியது.
இந்த கட்டடத்தில் உள்ள 120 வீடுகளில் வசித்தவர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பலர் தீப்பிடித்த பகுதியில் சிக்கிக்கொண்டனர். சிக்கியிப்பவர்கள் யார் என அடையாளம் முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தீப்பிடித்த கட்டடம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் உள்ளே மீட்பு பணியை தொடர்ந்து முன்னெடுக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்திருப்பதை 2 நாட்களுக்கு முன்னர் லண்டன் பெரு நகர் பொலிஸார் உறுதி செய்திருந்தனர்.
இந்நிலையில், காணாமல் போன மேலும் பலரது நிலை பற்றி தகவல் கிடைக்காமையினால் அவர்களும் உயிரிழந்திருக்கலாம் பொலிஸார் கருதுகின்றனர்.
அவர்களை சேர்த்து, மொத்தம் 58 பேர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம் என்றும் நம்பப்படுகின்றது.