வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இரண்டு அமைச்சர்களையும் கட்டாய விடுப்பில் அனுப்பும் முடிவைக் கைவிட்டாலே தாம் அவருக்கெதிராகக் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கைவிடுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில வார இதழொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கு அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, முதலமைச்சரிடமிருந்து இதுவரை சாதகமான பதிலெதுவும் கிடைக்கப்பெறவில்லை.
இரண்டு அமைச்சர்களையும் கட்டாய விடுப்பில் அனுப்பும் முடிவை அவர் கைவிட்டாலே நாம் அவருடன் சமரசத்திற்குப் போகமுடியும்.
நேற்று மாலைவரை அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை எனத் தெரிவித்தார்.