வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா இன்று பதவி விலகியுள்ளார்.
இன்று முதலமைச்சரின் இல்லத்தில் தனது பதவி விலகல் கடிதத்தினை முதலமைச்சரிடம் கையளித்துள்ளார்.
வடமாகாண சபை அமைச்சர்களின் ஊழல், மோசடிதொடர்பாக விசாரணை செய்வதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் நியமிக்கப்பட்டவிசாரணைக்குழுவின் பரிந்துரையின்படி விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்விஅமைச்சர் குருகுலராஜா ஆகியோரை அவர்களதுஅமைச்சுப் பதவியை தியாகம் செய்யுமாறு முதலமைச்சர் பணிப்புரை விடுத்திருந்தார்.
முதலமைச்சரின் பணிப்பிற்கமைய விவசாய அமைச்சர் கடந்த 14ஆம் நாள் தனது பதவி விலகல் கடிதத்தினை முதலமைச்சரிடம் வழங்கியிருந்தார்.
கல்வி அமைச்சர் குருகுலராஜா தனது பதவி விலகல் கடிதத்தினை வழங்கப்போவதில்லையெனத் தெரிவித்து வந்த நிலையில் இன்று தனது பதவி விலகல் கடிதத்தினை முதலமைச்சரிடம் கையளித்துள்ளார்.