வடமாகாணசபையின் பதில் விவசாயi அமைச்சராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்கவுள்ளார்.
இன்று மாலை 3.00 மணியளவில் வடமாகாண சபை வளாகத்தில் இவ் பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அண்மையில் விவசாய அமைச்சராகவிருந்த பொ.ஐங்கரநேசன் மீது ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில் விசாரணை அறிக்கையில் அவரை பதவி விலகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த அமர்வின்போது விவசாய அமைச்சராகவிருந்த பொ.ஐங்கரநேசனை பதவியைத் தியாகம் செய்யுமாறு முதலமைச்சர் பணித்திருந்தார்.
இதன் காரணமாக வடமாகாண சபையில் விவசாய அமைச்சுப் பதவி வெற்றிடமாக உள்ள நிலையில் அதனை வடமாகாண முதலமைச்சர் பொறுப்பேற்றுக்கொள்ளவுள்ளார்.