காணாமற்போனவர்களுக்கான சான்றிதழ் வழங்குவது மாத்திரமே காணாமற்போனோர் அவலுவலகத்தின் பணியென சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வேறு எந்த அதிகாரமும் இந்த அலுவலகத்திற்கு வழங்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காணாமற்போனோர் தொடர்பாக ஆராய்வதற்கான திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்இ அதிகமானவர்கள் காணாமற் போனவையினால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கலாம் என்றே நான் கூறினேன்.
காணாமற்போனோர் தொடர்பாக ஆராய்ந்து சான்றிதழ் வழங்குவது மாத்திரமே இந்த அலுவலகத்தின் பணியாக இருக்கும். இந்த அலுவலகத்திற்கு வேறு எந்த அதிகாரமும் வழங்கப்படாது.
அத்துடன் காணாமற்போன நபர்களில் எவராவது கண்டுபிடிக்கப்பட்டால்இ அவர் தனது விபரம்தொடர்பாக உறவினர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டாம் எனக் கூறினால்இ அதனை உறவினர்களுக்குத் தெரியப்படுத்தாதிருத்தல் குறித்த அலுவலகத்தின் பணியாகும் எனவும் தெரிவித்துள்ளார்