தன்னைக் கருணைக் கொலை செய்துவிடுமாறு ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ரொபேட் பயஸ் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மூன்று பக்கங்கள் கொண்ட கடிதமொன்றை சிறைக் கண்காணிப்பாளரூடாகஇ தமிழக முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் ‘2014ஆம் ஆண்டு எம்மை விடுதலை செய்யும் முடிவை தமிழ்நாட்டு முதலமைச்சர் எடுத்தமைக்கு அனைத்து அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனாலும் அது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் எங்களின் விடுதலையை முன்பிருந்த மத்திய அரசும்இ தற்போதைய அரசும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அவை எமது வாழ்வை சிறைக்குள்ளேயே முடித்துவிடவேண்டுமென விரும்புகின்றன.
கடந்த ஜூன் 11ஆம் நாளுடன் நான் சிறைக்கு வந்து 26 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. என்னுடைய சிறைவாழ்க்கை என்னை மட்டுமல்ல ஒட்டு மொத்த குடும்பத்தையும் தண்டனைக்குள்ளாக்கியுள்ளது. பல காலமாக என்னுடைய குடும்பத்தினர் என்னை வந்து பார்க்காத நிலையில் நான் உயிருடன் வாழ்வதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
ஆகவே என்னை கருணைக் கொலை செய்து உடலைஇ எனது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விடுங்கள்’ என்று ரொபேர்ட் பயஸ் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.