அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பொருளாதார விவகாரங்களுக்கான துணை உதவியாளராக உள்ள கென்னத் ஐ ஜஸ்டெர் இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக தற்போது ரிச்சர்ட் வெர்மா உள்ளார். இவருக்கு பதிலாக அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சர்வதேச பொருளாதார விவகாரங்களுக்கான துணை உதவியாளராகவும்இ அந்நாட்டின் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராகவும் உள்ள கென்னத் ஐ ஜஸ்டெர் நியமிக்கப்பட இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஜஸ்டெர் இந்திய தூதராக நியமிக்கப்பட இருப்பதற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளதாகவும்இ விரைவில் அதிபர் டிரம்ப் இதற்கான உத்தரவை பிறப்பிக்க இருப்பதாகவும் வெள்ளை மாளிகையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர் பட்டம் பெற்றுள்ள கென்னத் ஐ ஜஸ்டெர்இ இந்தியா – அமெரிக்கா இடையே உள்ள பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்களில் முக்கிய காரணியாக இருந்துள்ளார். தற்போதுஇ அமெரிக்காவுக்கான இந்திய தூதராக உள்ள ரிச்சர்ட் வெர்மா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.