கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அரசிடமிருந்து தீர்வுகள் எவையும் கிடைக்காத நிலையில் இன்றைய தினம் வழிமறித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, அந்த இடத்திற்கு சென்ற பூநகரி பொலிஸ் அத்தியட்சகர், அந்த இடத்திலிருந்து மக்களை செல்லுமாறு தெரிவித்ததுடன், வீதி மறிப்பில் ஈடுபடுவதற்கான கிளிநொச்சி நீதிமன்றின் தடையுத்தரவையும் காண்பித்துள்ளார். இரணைதீவு பங்குத்தந்தையையும் இதன்போது கடுமையாக திட்டியுள்ளார்.
இதனால் குழப்பமடைந்த மக்கள் அங்கிருந்து அகன்று செல்லமாட்டோம் என தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த இடத்துக்கு விரைந்த பூநகரி பிரதேச செயலர் எஸ்.கிருஸ்ணேந்திரன்,
எதிர்வரும் 28ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் நானும் கலந்து கொள்வேன். கலந்துரையாடலில் இரணைதீவு தொடர்பாக தெரிவிப்பேன்.
அப்போது பாதுகாப்பு அமைச்சு கூட்டத்தில் தெரிவிக்கின்ற முடிவை உங்களிடம் தெரிவிக்கின்றேன். அதுவரை அமைதி காக்கவும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இதனையடுத்து வீதி மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
எனினும் தாங்கள் வழமை போன்று இரணைமாதா நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்து அகன்று சென்றுள்ளனர்.