தமது உயர்கல்வியைப் பெறுவதற்காக வருடந்தோறும் 80ஆயிரம் மாணவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதாக சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலநறுவை லங்காபுர வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்இ வருடத்தில் சுமார் இரண்டரை இலட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். அவர்களில் 90ஆயிரம் பேர் பல்கலைக்கழகத்திற்கான தகமையைப் பெற்றுக்கொள்கின்றபோதிலும் 25ஆயிரம் பேரே பல்கலைக்கழகத்திற்கான அனுமதியைப் பெறுகின்றனர்
ஏனைய மாணவர்கள் தமது உயர்கல்வியைப் பெறுவதற்காக அரச பல்கலைக்கழகங்கள் போன்று உயர் தரத்திலிருக்கும் தனியார் பல்கலைக்கழகங்களை நாட்டில் உருவாக்க வேண்டும்.
அவ்வாறேஇ வருடந்தோறும் 80 ஆயிரம் மாணவர்கள் தமது உயர் கல்வியைப் பெறுவதற்காக நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். வசதியற்ற பிள்ளைகளும் தமது சொந்த வீடுகளை விற்று உயர் கல்வியைப் பெறுவதற்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர் எனவும் தெரிவித்தார்.