அறிவுச்சோலை இதுதான்
தற்போது எம் உறச்சோலை…!!
பல உறவுகளை இழந்து
பல உறவுகளோடு
வாழ்ந்த சோலைக்கூட்டம்…!!
மறுவாழ்வு எமக்கானது
அல்ல எம் நாளைய
தலைமுறைக்கானது
அந்த தலைமுறை
வேறு யாரும் அல்ல
எம் தம்பி தங்கையர்களேதான்…!!
ஒரு சோலையில் பல மாலைகள்
பூத்துக்குலுங்கியது ஒரு காலம்..!!
அது எம் வாழ்வில் அன்று வீசியது
வசந்தகாலமாய்…!!
வாழ்க்கை வெறுத்துப்போய்
துருப்பிடித்து இத்துப்போய்
எந்த திசையில் பயணம் செய்வது
என்றும் எப்படி போய் சேர்வதும்
என்று தெரியாது…!!
நின்றோம் ஓர் காலம்….!!
பெயரும் தெரியாது
முகவரியும் தெரியாது…!!
தாய் முகம் தெரியாது
தந்தை இவர்தான் என்று -எம்
தாய் எமக்கு காட்ட
நேரமும் இல்லை…!!
தமிழன் தலை நிமிரவில்லை எனில்
எம் தலைகள் என்றோ ஓர் நாள்
எம் மண்ணில் இத்துப்போய்
மண்ணோடு மண்ணாய்
போய் இருக்கும்…!!
முகவரிதெரியாது…!!
ஒத்திகைக்கு எம் உடலங்கள்
காடையர்களால் எடுக்கப்பட்டிருக்கும்
ஏன் எனில் ஓடுவது – எம்
தமிழன் இரத்தம் அல்லவா…!!
சுவடு பிடித்திருக்கும்
ஓநாய்க்கூட்டங்கள்..!!
பெயர் தெரியாது
முகவரி தெரியாது…!!
என்று யாரும் இருக்க முடியாது
எம் மண்ணில் என்று அன்று தோன்றிய
ஓர் சிரிய சிந்தனையே
சோலையாய் பூத்துக்குழுங்கியது…!!
உலகில் பலபேர் வாய் உச்சரித்து
காந்தரூபன் அறிவுச்சோலையாய்..!!
அன்று எம் நெஞ்சங்களில்
கவளை இல்லை…!!
உறவுகள் இல்லை என்ற
சிந்தனை தோன்றவே இல்லை…!!
பட்டிணி இல்லை…!!
பாடசாலை சொகுசு பேருந்தில்…!!
விளையாட்டில் தோல்வியே கண்டதில்லை..!!
பட்டம் பல பெற்று…!!
பல சாதனைகள் …!!
வெற்று வாழ்க்கை என்று இல்லை..!!
நாம் திரும்பிய திசை எல்லாம்
சிந்தனை பலகைகள்…!!
எம் தாயின் மனதில் அசையாத
திடமான இடம்பிடித்து
வாழ்ந்து வந்த எமை…!!
மீண்டும் ஓநாய்கள்
வெறியாட்டம் ஆடி வெற்றியாம்
பெரிய வெற்றி கண்டு -எம்
எதிர்கால வாழ்க்கையில்
மண்ணல்லிப்போட்டு விட்டு…!!
பட்டாசு கொழுத்தியும்….!!
கேக் வெட்டியும்…!!
கொடிகளை பறக்கவிட்டும்
மிட்டாய்களை வீதி வீதியாக
வீசி எம் எதிர் எதிர்காலத்தை
சிதைத்து விட்டோம் என்று…!!
ஏசி ரூமிலே இருந்துகொண்டு
வெற்றி எப்படி பெற்றோம்
என்று மட்டுமே பேச்சு….!!
எம் எதிர்காலம் பற்றி
வெற்றி பெற்றவர் எவரும்
சிந்திக்கவும் இல்லை
பேசவும் இல்லை….!!
இது நிசர்சனமான உண்மை…!!
எது எப்படி போயினும்
எம் சிந்தனையே எமக்குதவி…!!
தன் கையே தனக்குதவி….!!
– ராஜ் யாழ்