தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஐந்துநாள் பயணமாக ஜேர்மனிக்குப் பயணமாகியுள்ளனர்.
ஜேர்மனியின் அரசியலமைப்புத் தொடர்பாக ஆராயவே குறித்த குழுவினர் ஜேர்மனிக்குப் பயணமாகியுள்ளனர்.
அண்மையில் சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்த ஜேர்மன் சபாநாயகர் இவ்வழைப்பை விடுத்திருந்தார்.
இந்தப் பயணத்தின்போது ஜேர்மன் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் அந்நாட்டின் நடைமுறைகள் தொடர்பாக இக்குழுவினர் ஆராயவுள்ளனர்.
இக்குழுவில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சபாநாயகர் கருஜெயசூரிய, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், சரத் அமுனுகம, கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசநாயக்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.