கேப்பாப்புலவு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கேப்பாப்புலவு மக்கள் கொழும்பு தொடருந்து நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமவுரிமை இயக்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் மூவினமக்களும் கலந்துகொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது மனுவை ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்காக அவரது அலுவலகம் நோக்கு ஆர்ப்பாட்டப் பேரணி சென்றவேளை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10பேர் கொண்ட குழு தமது கோரிக்கைகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.