ஒரு சிறந்த கட்டமைப்பை உருவாக்குவதென்பது மிக மிக கஷ்டமானது. ஒரு பிரபாகரனை தவிர தனக்கு பின் ஒரு கூட்டத்தை சேர்க்க யாராலும் முடியாது. அவனே தேசியத் தலைவர். என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்தார்.
இன்று பிற்பகல் நல்லூரில் அமைந்துள்ள துர்கா மணிமண்டபத்தில் இடம்பெற்ற
கம்பன் விழாவினுடைய இறுதிநாளில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வரலாற்றை நாம் மறந்து விடுகிறோம் அல்லது மறைத்து விடுகிறோம். காலப்போக்கில் வரலாறு பதிவு செய்யப்படும். ஒரு தடவை கம்பன் விழாவில் நடுவராக கடமையாற்ற அழைத்தார்கள் நான் அதை மறுத்துவிட்டேன். நடுவர் வேலை சிக்கலான வேலை இப்போதும் சரி அப்போதும் சரி சிக்கலானது.
நல்லூரில் முதன் முதலில் கம்பன் விழா நடைபெற நான் என்னாலான உதவிகளை செய்தேன். தமிழ் நாடு அரசு எமது மாகாண சபையைபோல சிக்கலான அரசு அப்படி இருந்த அரசு இலங்கையரான கம்பஜெயராஜை கௌரவிக்கின்றது என்றால் சாதாரணமான விடையமல்ல.
நல்லூரில் எல்லா காரியங்களிலும் மையப்பொருளாக இருந்திருக்கிறேன். மறைக்க நினைத்தவர்கள் மறைக்கலாம் நான் மறைந்த பின் அது பேசும் என்பது எனக்கு நம்பிக்கையாக இருக்கிறது. மக்களின் நிறைவே எனது நிறைவு. ஜெயராஜ் தனக்கு பின் பெரும் கூட்டத்தை வைத்திருக்கிறார். ஒரு சிறந்த கட்டமைப்பை உருவாக்குவதென்பது மிக மிக கஷ்டமானது. ஒரு பிரபாகரனை தவிர தனக்கு பின் ஒரு கூட்டத்தை சேர்க்க யாராலும் முடியாது. அவனே தேசியத் தலைவர்.
யுனெஸ்கோ அறிக்கையில் தமிழும் 50 வருடங்களில் தமிழ் அழிந்து விடும் என்றார்கள். அவர்களுக்கு கம்பன் கழகம் பற்றி தெரியவில்லை. தமிழ் அழியாது இலங்கையிலும் இந்தியாவிலும் அது வாழும் எனவும் தெரிவித்தார்.