புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட வழக்கு இன்றிலிருந்து தொடர்ச்சியாக ஆறு நாட்கள் யாழ் மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
2015ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் நாளுடன் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நிறைவுபெற்ற நிலையில் சந்தேக நபர்களுக்கெதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 41 குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணை திட்டமிட்டு இழுத்தடிக்கப்பட்டு வருவதாக பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், குறித்த வழக்கினை விசாரணை செய்வதற்கு மூன்று தமிழ் நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.
வவுனியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான நீதிபதிகள் இளஞ்செழியன் மற்றும் பிரேம்சங்கர் ஆகியோரைக் கொண்ட தீர்ப்பாயம் இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது.
குறித்த வழக்கு இன்றிலிருந்து ஆறு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது