அடைமழைக்கும் மத்தியில் சிறிலங்கா படையினர் நடத்திய குண்டுமழை
11-04-2009 அன்று சனிக்கிழமை காலை தொடக்கம் இரவு வரை சிறிலங்கா படையினர் ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளான மாத்தளன் மற்றும் அம்பலவன்பொக்கணை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் அன்று தொடர்ச்சியாக பெய்த அடைமழைக்கும் மத்தியில் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லறி எறிகணை, மோட்டார் மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 32 அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75 அதிகமான பேர் படுகாயமடைந்தார்கள்.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக கொல்லப்பட்டவர்களை புதைக்க முடியாமலும், படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையும் காணப்பட்டது. இத்தாக்குதலில் இன்னும் பலர் கொல்லப்பட்டிருந்தார்கள் அவர்களின் பெயர், விபரம் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
-மீள் பதிவு