பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தளர்த்துமாறு கோரிய சில பலம்பொருந்திய நாடுகளும் தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தினை பலப்படுத்தி வருகின்றன.
எனவே இந்த விடயம் தொடர்பாக இலங்கையும் மீள சிந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை தளர்த்துவது குறித்து இலங்கையும் சர்வதேச சமூகமும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தன.
நீதிமன்றம், பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, வெளிவிவகாரம் ஆகிய அமைச்சுக்களும், பொலிஸ் திணைக்களம்,சட்ட மா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களும் பேச்சுவார்த்தை நடத்தி உத்தேச சட்ட வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்து புதிதாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றை அமுல்படுத்துவது தொடர்பாக இன்னும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.