சி.வி.விக்னேஸ்வரன் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார் என்பதற்கு புதிய அமைச்சர்களின் நியமனம் சிறந்த சான்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரினால் வடக்கு மாகாணத்திற்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“முதலமைச்சர் இலங்கைத் தமிழரசு கட்சியுடன் ஆலோசிக்காமல் செயற்படுவதாக முதலமைச்சர் சி.வி.க்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எழுதிய இரண்டாவது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அதனை நிரூபிக்கும் வகையில் முதலமைச்சரின் செயற்பாடு அமைந்துள்ளது. விக்னேஸ்வரன் தமிழரசுக் கட்சியைப் புறக்கணித்து தன்னிச்சையாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பதற்கு, புதிய அமைச்சர்களின் நியமனம் சிறந்த சான்றாகும்” என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.