விளம்பரங்களை நம்பி வெளிநாடுகளுக்கு செல்வோர் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
குறுகிய நாட்களுக்குள் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவும், வீசா பெற்றுத் தருவதாகவும் பல்வேறு நிறுவனங்கள் விளம்பரங்களை செய்கின்றன.
எனினும் இவ்வாறான விளம்பரங்களின் ஊடாக போலியான நிறுவனங்கள் ஆட்கடத்தல்களில் ஈடுபடுகின்றன.
எனவே இவ்வாறான விளம்பரங்களை நம்பி வெளிநாடு செல்ல முயற்சிக்கின்றவர்கள், முதலில் குறித்த விளம்பரங்கள் மற்றும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கையில் இடம்பெறும் ஆட்கடத்தல்கள் தொடர்பில் அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து விளக்களிக்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.