ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கு ஏற்ற சூழல் குறித்து தேர்தல் ஆணையகம் ஆராய்ந்து வருகிறது. சாதகமான சூழல் உருவானதும் தேர்தல் நடத்தப்படும். இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கான திகதியை தேர்தல் ஆணையகம் தீர்மானிக்கும். அவ்வாறு விசாரணைகள் இடம்பெறும்போது சம்மந்தப்பட்டவர்கள் அழைக்கப்படுவர்’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் வெற்றிடமாகவுள்ள ஆர்.கே.நகரில் கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி இடைத்தேர்தல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையகத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.
அதன்அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.