“சிறுவர்களாகிய உங்களுக்கு வாசிப்பதற்கு ஓர் புதிய உதயம்” எனும் தொனிப்பொருளில் சைல்ட் பண்ட் நிறுவனம் மற்றும் அபிமான சமூக அபிவிருத்திச் சங்கம் ஆகியன இணைந்து குறித்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளன.
இதில் முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு வலயக்கல்விப்பணிப்பாளர் புவனராஜா கலந்துகொண்டிருந்தார்.
15 நாட்களுக்கு ஒரு தடவை குறித்த பாடசாலைக்கு சென்று மாணவர்களுக்கான நூல்களை வழங்குவதுடன் மாணவர்களினுடைய வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் பல நூல்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொண்ட முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர் புவனராஜா கருத்து தெரிவிக்கையில்,
மாணவர் சமூகம் நல்ல நூல்களை வாசிப்பதன் மூலம் தமது அறிவை மேலும் வளப்படுத்திக்கொள்ள முடியும், எமது மாணவர்களைப் பொறுத்தவரையில் ஏழு வயதுடைய மாணவன் ஒருவன் நிமிடத்திற்கு 40 – 45 வரையான சொற்களை வாசிக்கக்கூடியதாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றபோதும் வேறு மொழிகளில் மாணவர்கள் 50 – 55 சொற்களை வாசிக்கின்றனர்.
இந்த நடமாடும் நூலகத்தின் சேவையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் சிறந்த கதை நூல்கள் காணப்படுகின்றன.
தற்போது மாணவர்கள் தொலைபேசிகளிலும் கணினிகளிலும் நேரத்தை செலவிடுகின்றனர். அவற்றுக்காக ஒதுக்கும் நேரத்தை குறைத்து நூல்களை வாசிப்பதன் மூலம் சிறந்த அறிவை பெற்றுக்கொள்ளமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.