மேஷம்
முன்எச்சரிக்கை உணர்வு அதிகமுள்ளவர்களே! உங்களுடைய பூர்வ புண்யாதிபதியான சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளால் அந்தஸ்து ஒருபடி உயரும்.
நீங்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் பிள்ளைகளை சேர்ப்பீர்கள். குழந்தை பாக்யம் சிலருக்கு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. பல் வலி குறையும். பார்வைக் கோளாறும் சரியாகும்.
பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். பழைய வீட்டை இடித்துவிட்டு புது வீடு கட்டும் முயற்சியிலும் இறங்குவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். ஆனால் குரு 6-ல் மறைந்திருப்பதால் வீண் பழி வந்து செல்லும்.
யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். டி.வி., ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் குடி நீர் குழாய் பழுது வந்துப் போகும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சனி 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக தொடர்வதால் எதிலும் போராட்டம், பயம், தோல்வி மனப்பான்மை, ஏமாற்றம் வந்துச் செல்லும்.
ஆனால் ராசிநாதன் செவ்வாய் சாதகமாக இருப்பதால் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். தாயாரின் உடல் நலம் சீராகும்.
இந்த மாதம் முழுக்க புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்து உதவுவார்கள். வெளிவட்டாரத்திலும் மதிப்பு, மரியாதைக் கூடும். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜிதமாக யோசித்து எந்த வேலையையும் செய்து முடிப்பீர்கள்.
வாழ்க்கையில் வெற்றி பெற கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போக வேண்டும் என்ற உண்மையை உணர்வீர்கள். மனைவிவழியில் ஒத்தாசையாக இருப்பார்கள். பணவரவு அதிகரிக்கும். வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள்.
கன்னிப் பெண்களே! பழைய நண்பர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். காதல் விவகாரங்களில் இருந்த குழப்பம் நீங்கும். உயர்கல்வியில் வெற்றி உண்டு. வியாபாரத்தில் கணிசமாக லாபம் கூடும். பழைய பாக்கிகளும் வசூலாகும்.
புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். ஆனால் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். கலைத்துறையினரே! நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
ரிஷபம்
மறப்போம், மன்னிப்போம் என்றிருப்பவர்களே! உங்கள் தன பூர்வ புண்யாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் மன தைரியம் குறையாது.
நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பிள்ளை பாக்யம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.
இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 14-ந் தேதி வரை சூரியனும், ஜுலை 11ம் தேதி வரை செவ்வாயும் 2-ல் நிற்பதால் லேசாக பார்வைக் கோளாறு வந்து நீங்கும். கண் வலி வரக்கூடும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு வேகமாகப் பேசுவீர்கள்.
செய்நன்றி மறந்த மனிதர்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். செலவினங்கள் கூடும். இடம், பொருள் அறிந்து பேசப்பாருங்கள். சகோதர வகையிலும் மனக்கசப்பு வரக்கூடும். 15-ந் தேதி முதல் சூரியனும், 12-ந் தேதி முதல் செவ்வாயும் சாதகமாவதால் தடைகளெல்லாம் உடைப்படும்.
அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். கண்டகச் சனி நடைபெறுவதால் கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரும். வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும். 5-ல் குரு நிற்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளை பாக்யம் உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலைக் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசிக்குள் ஆட்சிப் பெற்று அமர்ந்ததால் அழகு, இளமைக் கூடும். பழுதான வாகனத்தை சரி செய்வீர்கள். விலை உயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். 4-ம் இடத்தில் ராகு நிற்பதால் வாகனம் அடிக்கடி பழுதாகும். அடுத்தவர்கள் வீட்டு விவகாரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்காதீர்கள்.
தாயாரின் உடல் நிலை பாதிக்கும். தாய்வழி சொத்துப் பிரச்னைகள் கொஞ்சம் சிக்கலாகி நல்ல விதத்தில் முடிவடையும். கன்னிப் பெண்களே! நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். காதல் கனியும். போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெற்று புது வேலையில் சேர்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.
வேற்றுமதம், மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும். உத்யோகத்தில் ஆர்வம் பிறக்கும். மூத்த அதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். ஆனால் கண்டகச் சனி நடைபெறுவதனால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும்.
மிதுனம்
ஆரவாரமில்லாமல் சாதிப்பவர்களே! இந்த மாதம் முழுக்க சூரியனும், செவ்வாயும் சாதகமாக இல்லாததால் வேலைச்சுமை அதிகரிக்கும். நெஞ்சு வலி, நெஞ்சு எரிச்சல் வரக்கூடும். பயந்துவிடாதீர்கள்.
வாயுத் தொந்தரவு தான். உணவில் காரம், உப்பு, புளியை குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள். வாயு பதார்த்தங்களையும் தவிர்த்துவிடுங்கள். சகோதரங்களால் சங்கடங்கள் வரும். தூக்கம் குறையும். உள்மனதிலே சின்ன சின்ன குழப்பங்களும், பயமும் வந்துச் செல்லும்.
கட்டிக் காப்பாற்றிய கௌரவத்திற்கு களங்கம் வந்து விடுமோ என்றெல்லாம் களங்காதீர்கள். காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இருசக்கர வாகனத்தை கவனமாக இயக்கப்பாருங்கள்.
ஆனால் ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். 4-ல் குரு நிற்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் வீண் பழிக்கு ஆளாவீர்கள்.
6-ல் சனி வலுவாக இருப்பதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பால்ய நண்பர்கள் உங்களை தேடி வருவார்கள். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்கள் உதவுவார்கள். சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டு. மனக்கசப்புகள் நீங்கும். வீண் விவாதங்கள் குறையும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.
வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். கன்னிப் பெண்களே! உங்களை ஏமாற்றி வந்த சிலரிடமிருந்து இந்த மாதத்தில் விடுபடுவீர்கள். பெற்றோரின் ஆலோசனைகள் உதவிகரமாக இருக்கும். போராடி நல்ல நிறுவனத்தில் வேலையில் அமர்வீர்கள்.
வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி உண்டு. பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பழம், காய்கறி, கட்டிட உதிரி பாகங்கள், வாகனம் மூலமாக லாபம் அதிகரிக்கும்.
உத்யோகத்தில் விரும்பத்தாக இடமாற்றம் வரக்கூடும். சக ஊழியர்களின் விடுப்பால் கூடுதல் நேரம் வேலைப் பார்க்க வேண்டி வரும். ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். தன் பலவீனங்களை சரி செய்துக் கொள்ள வேண்டிய மாதமிது.
கடகம்
கற்பனையில் கோட்டை கட்டுபவர்களே! சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதனால் புது டிசைனில் நகை வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். அன்யோன்யம் அதிகரிக்கும். திடீர் பணவரவு உண்டு. செல்வாக்குக் கூடும்.
ஆனால் குருபகவான் 3-ம் வீட்டில் முடங்கிக் கிடப்பதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். பணம் வாங்கித் தருவதிலும், கல்யாண விஷயத்திலும் குறுக்கே நிற்க வேண்டாம். யாரையும் யாருக்கும் பரிந்துரைச் செய்து சிக்கிக் கொள்ள வேண்டாம். 5-ல் சனி நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும்.
பூர்வீக சொத்தை அதிகம் செலவு செய்து பராமரிக்க வேண்டி வரும். 11ம் தேதி வரை செவ்வாய் 12ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். தூக்கமின்மை, அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது.
அக்கம்-பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த வாய்ப்பிருக்கிறது. புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் இதமாகப் பேசி பல வேலைகளையும் முடிப்பீர்கள். மனக்குழப்பம் விலகும். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும்.
நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். பிள்ளைகளை அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில், நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். கன்னிப் பெண்களே! நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள்.
அரசு வேலைக்கு தீவிரமாக உங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். பங்குதாரர்கள், வேலையாட்களால் ஏமாற்றங்களும், அலைக்கழிப்புகளும் இருக்கும். உத்யோகத்தில் கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும்.
பல முக்கிய வேலைகளை மேலதிகாரி உங்களை நம்பி ஒப்படைப்பார். அவ்வப்போது இடமாற்றம் வருமோ என்ற ஒரு அச்சம் இருக்கும். சக ஊழியர்களுடன் ஈகோவாகப் பேச வேண்டாம். நேரடி மூத்த அதிகாரி தொந்தரவு தருவார். ஆனால் மேல்மட்டத்திலிருக்கும் மூத்த அதிகாரி உங்களுக்கு ஆதரவாக பேசுவார்.
கலைத்துறையினரே! கிசுகிசுத் தொல்லைகள் வரும். உங்களின் படைப்புகளை ரகசியமாக வையுங்கள். எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் மாதமிது.
சிம்மம்
சிக்கல்களைக் கண்டு அஞ்சாதவர்களே! 14-ந் தேதி வரை ராசிநாதன் சூரியனும், 11ம் தேதி வரை செவ்வாயும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். எதிர்பார்ப்புகள் நல்ல விதத்தில் முடிவடையும்.
எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். ஒதுங்கியிருந்த, பதுங்கியிருந்த நீங்கள் இனி எல்லா விஷயங்களிலும் ஆர்வமாக ஈடுபடுவீர்கள். தன்னம்பிக்கைப் பிறக்கும். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். உங்களுக்கும் கௌரவப் பதவிகள் தேடி வரும்.
அரைக்குறையாக இருந்த வீடு கட்டும் பணியை முடிப்பீர்கள். சகோதர வகையில் இருந்த சங்கடங்கள் நீங்கும். தீர்க்கமான, திடமான முடிவுகள் எடுப்பீர்கள். வேலைக் கிடைக்கும். சொத்துப் பிரச்னை தீரும். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். குரு 2-ல் தொடர்வதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். கல்யாணம் கூடி வரும்.
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வீட்டை கட்டி முடிக்க வங்கிக் கடன் கிடைக்கும். ஆடை, அணிகலன் சேரும். ஆனால் 4-ல் சனி நீடிப்பதால் தாயாரின் உடல் நலம் பாதிக்கும். பழைய கடனை நினைத்து அச்சப்படுவீர்கள். சகோதரங்களால் நிம்மதி இழப்பீர்கள்.
தாய்மாமன், அத்தை வழியில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பள்ளி, கல்லூரி கால நண்பர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். சிலர் வீடு மாற முயற்சி செய்வீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும்.
சுக்ரனும் சாதகமான வீடுகளில் பயணம் செய்வதால் சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பணவரவு திருப்தி தரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். கன்னிப் பெண்களே! புது வேலைக் கிடைக்கும். பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
வியாபாரத்தில் அதிரடி லாபம் கிடைக்கும். புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். கடன் வாங்கி முதலீடு செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் பழைய பங்குதாரர்கள் விலகுவார்கள். வசதி, வாய்ப்பு, நல்ல பின்னனி உள்ள பங்குதாரர்கள் வந்து சேருவார்கள். உத்யோகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். அதிகாரிகள் உங்களின் ஆலோசனைகள், கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வார்கள்.
கன்னி
கேள்விக் கணைத் தொடுப்பதில் வல்லவர்களே! ராசிநாதன் புதன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள்.
குழம்பிக் கொண்டிருந்த நீங்கள், தெள்ளத் தெளிவாக முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்பு, மரியாதைக் கூடும். நண்பர்கள், உறவினர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் இவற்றையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சூரியன் சாதகமாக இருப்பதால் தந்தையாரின் உடல் நிலை சீராகும்.
அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசுப் பணியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு வேலைக் கிடைக்கும். அரசாங்கத்தால் சில சலுகைகளும் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.
செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். வழக்கில் ஜாமீன் கிடைக்கும். புது சொத்து வாங்குவீர்கள். குழந்தை பாக்யம் உண்டு. பிள்ளைகளை போராடி அவர்கள் ஆசைப்பட்ட நிறுவனத்தில் சேர்ப்பீர்கள்.
வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணருவார்கள். ஆனால் ஜன்ம குரு தொடர்வதால் உங்கள் மீது சிலர் சேற்றை வாரி பூச முயற்சிப்பார்கள். உங்கள் வாயை சீண்டிப் பார்ப்பார்கள்.
அநாவசியப் பேச்சையும், முன்கோபத்தையும் தவிர்க்கப் பாருங்கள். குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவுகளும், வீண் சந்தேகங்களால் பிரிவும் வரக்கூடும். விட்டுக் கொடுத்துப் போங்கள். தலைச் சுற்றல், நெஞ்சு வலி, தூக்கமின்மை, ஒருவித படபடப்பு வந்துப் போகும். கை, கால் அசதி அதிகமாகும்.
3-ல் சனி வலுவாக அமர்ந்திருப்பதால் மனோ பலம் அதிகரிக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு.
வாகனத்தை சீர் செய்வீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். பெற்றோருக்கு தெரியாமல் பெரிய விஷயங்களில் ஈடுபட வேண்டாம். போராடி உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு
துலாம்
நீதியின் பக்கம் நிற்பவர்களே! சுக்ரன் 8ல் மறைந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்து நீங்கும். மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். ஆனால் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் வீட்டில் அமர்வதால் சச்சரவுகள் நீங்கி சமாதானம் உண்டாகும்.
சகோதரியுடன் இருந்த மனக்கசப்பு மாறும். சகோதரரால் ஏற்பட்ட நட்டங்கள் சரியாகும். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். நிலம், வீடு வாங்குவது, விற்பதில் இருந்த வில்லங்கம் விலகும். புதன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். புது வேலைக் கிடைக்கும். சிலருக்கு அயல்நாட்டில் வாய்ப்பு வரும்.
அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. சவால்களில் வெற்றி கிட்டும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். மகான்கள், சாதுக்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பூர்வீக சொத்தால் வருமானம் வரும்.
குரு 12-ல் நிற்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். வீண் சந்தேகம் வரும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம்.
கன்னிப் பெண்களே! உங்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். காதலில் வெற்றி உண்டு. வியாபாரம் செழிக்கும். தள்ளிப் போன ஒப்பந்தம் மீண்டும் கையெழுத்தாகும். பணியாளர்களிடம் கண்டிப்பாக இருங்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.
கடையை விரிவுப்படுத்துவது, சீர்படுத்துவது போன்ற முயற்சிகளும் வெற்றியடையும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.
சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். சம்பள பாக்கி தொகையும் கைக்கு வரும்.
கலைத்துறையினரே! பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். மூத்த கலைஞர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கடின உழைப்பால் இலக்கை எட்டும் மாதமிது.
விருச்சிகம்
விளம்பரத்தை விரும்பாதவர்களே! குரு 11-ம் வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றி, மகிழ்ச்சி கிட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். திடீர் லாபம் உண்டு. வேலைக் கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும்.
வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தடைப்பட்ட திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.
அரசியல்வாதிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரம் பரபரப்புடன் காணப்படும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். ஆனால் 11ம் தேதி வரை செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால் டென்ஷன் குறையும். ஆனால் அலைச்சல், சிறுசிறு விபத்துகளும் வந்துப் போகும்.
சகோதர வகையில் மனத்தாங்கல் வந்துச் செல்லும். சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின், கால்சியம் சத்து குறைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சொத்து வாங்கும் போது தாய் பத்திரத்தை சரி பார்த்து வாங்குங்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம்.
சுக்ரன் சாதகமாக இருப்பதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உங்கள் அழகு, இளமைக்கூடும். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புதன் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். நண்பர்கள் சிலர் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள்.
கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களின் தியாக மனசைப் புரிந்துக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். பெற்றோருக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் உங்களுக்கிருந்த எதிர்ப்புகள் நீங்கும். இடமாற்றம் உண்டு.
அலுவலகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் இல்லையே என வருத்தப்படுவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். சிக்கனமும், நாவடக்கமும் தேவைப்படும் மாதமிது.
தனுசு
வளைந்துக் கொடுக்கத் தெரியாதவர்களே! 26-ந் தேதி வரை கேது 3-ம் வீட்டிலேயே நீடிப்பதால் மாற்றுமதத்தவர்களால் ஆதாயம் உண்டு. பால்ய நண்பர் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள்.
செவ்வாய் சாதகமாக இல்லாததால் சகோதரருடன் மனக்கசப்புகள் வரக்கூடும். சொத்து வாங்குவது, விற்பதில் தடைகள் வந்து நீங்கும். எதிரிகள் யார், நண்பர்கள் யார் என்று தெரியாமல் தவிர்த்தீர்களே!
இனி சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பாகப்பிரிவினை விஷயத்தில் அவசரம் வேண்டாம். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் இதமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள்.
வீட்டை விரிவுப்படுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். மனைவிவழியில் உதவிகளுண்டு. புது நட்பு மலரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. குரு 10-ல் நிற்பதால் சின்ன சின்ன வீண்பழி வந்துப் போகும். எதிலும் தடுமாற்றம், தயக்கம் வந்துப் போகும்.
வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். கூடாபழக்கமுள்ள நண்பர்களின் சகவாசங்களை தவிர்ப்பது நல்லது. சனி 12-ல் நிற்பதால் தவிர்க்க முடியாத செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும்.
வீடு, மனை வாங்கும் போது, விற்கும் போது அலட்சியம் வேண்டாம். தங்க ஆபரணங்களை கவனமாகப் பயன்படுத்தவும். கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
சுக்ரன் 6-ல் மறைந்திருப்பதால் சின்ன சின்ன வாகன விபத்துகள் வரக் கூடும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை ஏற்படும். கணவன்-மனைவிக்குள் சாதாரண விஷயத்திற்கெல்லாம் சண்டை வரும். மனைவிக்கு மாதவிடாய் கோளாறு வரக்கூடும்.
கழிவு நீர் குழாய் பழுது வந்து நீங்கும். அருந்துக் கிடக்கும் மின்கம்பியை மிதிக்க வேண்டாம். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலையாட்களையும் சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். கலைத்துறையினரே! பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் வரும். மூத்த கலைஞர்கள் உதவுவார்கள். விட்டுக் கொடுத்து விட்டதைப் பிடிக்கும் மாதமிது.
மகரம்
வீரியத்தை விட காரியத்தில் கண்ணாக இருப்பவர்களே! 14-ந் தேதி வரை சூரியன் 6-ல் அமர்ந்திருப்பதால் எதிர்பாராத திடீர் யோகம் உண்டாகும். பெரிய பதவி கூடி வரும்.
சொத்து வாங்குவீர்கள். தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். திடீர் பயணங்களால் ஆதாயம் உண்டு. மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு.
நீண்ட நாட்களாக தடைப்பட்ட வெளிநாட்டு பயணம் சாதகமாக அமையும். தாயாரின் உடல் நலம் சீராகும். 11ம் தேதி வரை செவ்வாய் 6-ல் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளிடம் இருந்து வந்த அலட்சியம், பிடிவாதம், முன்கோபம் பொறுப்பற்ற போக்கெல்லாம் விலகும்.
பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மூத்த சகோதரங்களால் பயனடைவீர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு, மனை வாங்குவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்களின் செல்வம், செல்வாக்குக் கூடும். குரு 9-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்வையிடுவதால் மனக்குழப்பம் நீங்கும். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள்.
தந்தைவழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். பிதுர்வழி சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். சனி லாப வீட்டில் நிற்பதால் அயல்நாடு, அண்டை மாநிலத்தவரால் ஆதாயம் அடைவீர்கள்.
ராகுவும், கேதுவும் சரியில்லாததால் அந்தரங்க விஷயங்களை வெளியிட வேண்டாம். அதிரடியாக செயல்படாமல் சில காரியங்களை யோசித்து செய்யப் பாருங்கள். கன்னிப் பெண்களே! கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபத்தை பெருக்குவீர்கள்.
வேலையாட்கள், பங்குதாரர்களின்தவறைச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். கடையை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
கலைத்துறையினர்களே! கௌரவிக்கப்படுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். வி.ஐ.பிகளின் ஆதரவால் வெற்றி பெறும் மாதமிது.
கும்பம்
காக்காய் கழுகாகாது என்பதை அறிந்தவர்களே! சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஓரளவு பணவரவு உண்டு. வாகன வசதிப் பெருகும்.
வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். ஷேர் பணம் தரும். உங்கள் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். எதிர்ப்புகள் குறையும். குழந்தை பாக்யம் உண்டாகும். தாய்வழி உறவினர்கள் ஆதரிப்பார்கள். குலதெய்வக் கோவிலை புதுப்பிப்பீர்கள்.
பூர்வீக சொத்தில் உங்கள் ரசனைக் கேற்ப மாற்றம் செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். 14-ந் தேதி வரை 5-ல் சூரியன் நிற்பதால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் சலசலப்பு வந்துப் போகும். மனைவிவழியில் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள்.
15-ந் தேதி முதல் அரசால் அனுகூலம் உண்டாகும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 11ம் தேதி வரை 5-ல் செவ்வாயும் நிற்பதால் எதையும் யோசித்து முடிவெடுங்கள். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்தால் நன்றாக இருக்குமே என நினைப்பீர்கள்.
12-ந் தேதி முதல் செவ்வாய் 6-ல் நுழைவதால் உங்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். குரு 8ல் மறைந்திருப்பதனால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது ஒருமுறைக்கு, பலமுறை யோசித்து கையெழுத்திடுவது நல்லது.
இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டாம். ராசிநாதன் சனி 10-ம் வீட்டில் தொடர்வதால் உத்யோகத்தில் கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். ஆனால் உயரதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சிலருக்கு அயல்நாட்டில் வேலை அமையும். சம்பள பாக்கி கைக்கு வரும். ஹிந்தி, கன்னட மொழியினரால் பயனடைவீர்கள்.
கன்னிப் பெண்களே! சமயோஜித புத்தியுடன் நடந்துக் கொள்வீர்கள். பெற்றோர் நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மேலதிகாரி உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புத் திறன் வளரும். திடீர் திருப்பங்கள் ஏற்படும் மாதமிது.
மீனம்
பாசவளையில் சிக்குபவர்களே! ராசிநாதன் குருபகவான் 7-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை வரத் தொடங்கும்.
குடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். உறவினர்கள், விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். இந்த மாதம் முழுக்க நீங்கள் பரபரப்பாக காணப்படுவீர்கள். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு அவர்களுக்கு நெருக்கமாவீர்கள். செவ்வாய் சாதகமாக இல்லாததால் தாயாருடன் மனத்தாங்கல் வரும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு வந்துப் போகும். வழக்கால் சில நெருக்கடிகள் ஏற்படக்கூடும்.
சகோதரங்களால் செலவுகள் வரக்கூடும். பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் உயர்ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பெரிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். வீடு கட்ட லோன் கிடைக்கும். ப்ளான் அப்ரூவலாகும். புதன் சாதகமாக இருப்பதால் கல்யாணத் தடைகள் நீங்கும்.
ஷேர் மூலம் பணம் வரும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த உறவினரை சந்தித்து மகிழ்வீர்கள். நட்பு வட்டம் விரியும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் நல்ல விதத்தில் முடியும்.
நவீன ரக வண்டி, அலைப்பேசி வாங்குவீர்கள். குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். சிலர் காற்றோட்டம், குடிநீர் வசதி உள்ள வீட்டிற்கு குடிப்புகுவீர்கள். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். இந்த மாதம் முழுக்க சூரியனும் சாதகமாக இல்லாததால் வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள்.
கூடுதல் அறை அமைப்பது, கழிவு நீர், குடி நீர் குழாயை மாற்றி அமைப்பது, மின்சார சாதனங்களை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் இறங்குவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பழைய கடனை நினைத்து அவ்வப்போது பயம் வரும். சனி 9ல் நிற்பதால் புது வேலை அமையும். வி.ஐ.பிகளின் தொடர்பு கிட்டும்.
கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற துணிச்சல் வரும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள்.
புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் வேலைச்சுமையும், ஒருவித மனப்போராட்டமும் வந்துச் செல்லும்.
கலைத்துறையினர்களே! கடின வேலைக்குத் தகுந்தாற்போல் பரிசு, பாராட்டுகள் வந்து சேரும்.