இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பயிற்சியாளர் பதவிக்கு ஷேவாக், டாம் மூடி, லால்சந்த் ராஜ்புத் உள்ளிட்டோர் விண்ணப்பித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையில், இது குறித்து பேட்டியளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஆலோசனைக் குழு உறுப்பினருமான சவுரவ் கங்குலி, 10ஆம் திகதி மும்பையில் நடைபெற உள்ள கிரிக்கெட் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் புதிய பயிற்சியாளர் தெரிவு செய்யப்படவுள்ளதாக கூறியுள்ளார்.