பிரித்தானியாவின் இளவரசி டயானா கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி கார் விபத்தில் மரணமடைந்தார்.
டயானா உயிரிழந்து அடுத்த மாதத்துடன் 20 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில், நேற்று அவரின் 56வது பிறந்தநாளாகும்.
இதையொட்டி அவரின் நினைவை போற்றும் வகையில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், டயானாவின் மகன்களான இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி கலந்து கொண்டனர்.
சகோதரர்கள் இருவரும், பிரித்தானியாவின் Northamptonல் அமைந்துள்ள தங்களது தாயின் கல்லறைக்கு சென்று அவரை நினைவு கூர்ந்தார்கள்.
வில்லியமுடன் அவர் மனைவி கேட் மிடில்டன் மற்றும் அவர்களின் குழந்தைகளான குட்டி இளவரசர் ஜார்ஜ் மற்றும் குட்டி இளவரசி சார்லோடும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
தங்களது தாய் டயானாவின் நினைவாக அவரின் சிலையை லண்டனில் உள்ள Kensington அரண்மனையில் அவர் மகன்கள் விரைவில் திறக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.