கனடா நாட்டின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ துவங்கி வைத்தார். 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கனடா நாட்டின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ துவக்கி வைத்துள்ளார்.
குறித்த விழாக்களில் சுமார் 5,00,000க்கும் அதிகமானோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நாட்டு பாராளுமன்ற வளாகம் அமைந்துள்ள ஒட்டாவா நகரில் மிகப்பெரிய விழாவிற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அக்ரோபாட், இசை கலைஞர்கள் மற்றும் வாண வேடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, கட்டிடங்கள் கண்களை கவரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
ஒட்டாவாவில் கூடியிருந்த பொதுமக்களுடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இளவரசர் சார்லஸ் கைகுலுக்கி தங்களது வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
கனடா முழுக்க பல்வேறு நகரங்களிலும் வெவ்வேறு வித்தியாசமான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுக்க கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து எவ்வித அசாம்பாவிதங்களும் ஏற்பாடமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விழா நிகழ்ச்சிகளுக்காகவும் பாதுகாப்புக்கு எனவும் கனடா அரசாங்கம் சுமார் 385 மில்லியன் டொலர் தொகையை செலவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று பிரித்தானிய காலனிகள் ஒன்றாக இணைந்து ஒரு நாடாக உருவான தினத்தை கனேடியர்கள் தேசிய தினமாக ஆண்டு தோறும் யூலை முதல் நாள் கொண்டாடுகின்றனர்.