கல்வி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பாடசாலைகளுக்கு கணனிகளை கொள்வனவு செய்ததில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாவை மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த மிகப் பெரிய நிதி மோசடி சம்பந்தமாக தகவல்களை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருந்தார்.
முன்னாள் கல்வி அமைச்சரான பந்துல குணவர்தன எவ்வித நடைமுறைகளையும் பின்பற்றாது கணனிகளை கொள்வனவு செய்துள்ளார்.
40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாவுக்குள் கணனிகளை கொள்வனவு செய்ய முடிந்த போதிலும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் முதல் அதிக விலைக்கு 60 ஆயிரம் கணனிகளை கொள்வனவு செய்துள்ளனர்.
இதன் மூலம் முன்னாள் கல்வி அமைச்சரான பந்துல குணவர்தன பலகோடி ரூபா மோசடியில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.
ராஜபக்ச அரசாங்கத்தில் கீழ் முன்னெடுக்கப்பட்ட தருண சல திட்டத்தின் ஊடக இந்த மோசடி நடந்துள்ளது.
கல்வி அமைச்சரின் இந்த தகவல் காரணமாக நாடாளுமன்றத்தில் இருந்த பந்துல குணவர்தன கடும் கோபத்திற்கு உள்ளானதுடன் சபை அமர்வுகளுக்கு தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்தி வந்தார்.
இதனையடுத்து முன்னாள் கல்வி அமைச்சர் சிறுப்பிள்ளை போல் நடந்து கொள்ளக் கூடாது என சபைக்கு தலைமை தாங்கியவர் கூறியுள்ளார்.