எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெறவுள்ளது இந்தப் போட்டி யானையின் அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்தப் பகுதியில் சுற்றி திரியும் 30க்கும் அதிகமான யானைகளை, அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போட்டியின் இடையில் யானைகள் கூட்டமாக மைதானத்திற்குள் நுழையும் ஆபத்தை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பகல் இரவு போட்டி என்பதனால் மின்விளக்கு வெளிச்சத்தில் யானைகள் குழப்பமடையும் ஆபத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யால வனப்பகுதியில் இருந்து புன்தல் ஊடாக உடுவல வரையிலான எல்லைகளில் இயற்கையாகவே உருவாகியிருந்த யானைகளுக்கான மூன்று இடம் காணப்பட்டுள்ளது.
எனினும் கடந்த அரசாங்கத்தினால் சுற்றுசூழல் குறித்து கருத்திற் கொள்ளாமல் அந்த பகுதிகளில் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நிலைமை காரணமாக காட்டு யானையின் தாக்குதல்களினால் அதிகமானோர் உயிரிழக்க நேரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.